நமது பாரத பூமியில், தென் தமிழகத்தில், கடலூர் மாவட்டம், வரக்கால்பட்டு கிராமத்தில் எழந்தருளி உள்ள ஶ்ரீ நாகசக்தி அம்மனின் தல வரலாறு பற்றி காண்போம் வாருங்கள்...
      வரக்கால்பட்டு கிராமம், மாரி அம்மன் கோவில் தெரு, தர்மகத்தா வீட்டில் உயர் குடிமகன் சற்குணசீலர், தெய்வதிரு. கந்தசாமிப் பிள்ளை அவர்களின் இல்லத் துணைவியாம், நல்லறம் பேணும் இராஜராஜேஸ்வரி அம்மையார் அவர்கள் வீரபத்திர சுவாமியை தினமும் வழிபாடு செய்வதுடன் தன் இல்லற பணிகளையிம் செய்து வந்தார்.
       விசுவாச வருடம் தை மாதம் மூன்றாம் வெள்ளிகிழமை, ரேவதி நட்சத்திரம் அன்று சூரியயோதயத்தில் தண்ணீர் எடுபதற்காக கிணற்றில் வாளியை விட்ட பொழது “உஷ்” என்ற ஒரு சப்தம் கேட்டு
கிணற்றில் எட்டிப்பார்க்க ஒரு நாகம் படமெடுத்து மேல் நோக்கி பார்த்த வண்ணம் கிணற்றில் இருந்தது. அதை பார்த்த இராஜராஜேஸ்வரி அம்மையார் பயபக்தியுடன் ஆண்டவனை வேண்டி தனது கணவரை அழைத்து வாலியை கொண்டு கயிற்றைப் பிடித்து மேலே இழக்கச் செய்து அருகில் இருந்த கொய்யா மர குச்சியை வைத்து ஒரு கூடையில் நாகபாம்பை இறக்கினார். அக்கூடையில் இறங்கியவுடன் படமெடுத்து அவர்கள் முன்னே ஆடி நிற்கவும், கற்புரம் பொருத்தி ஆராதனை செய்து அவ்விடத்தை விட்டு செல்லுமாறு வேண்டி நின்றனர். ஆனால் நாகபாம்பு வடிவில் வந்த நாக சக்தி அம்மன் அங்கிருந்து நகராமல் இருக்க அங்கிருந்த சிலர் குச்சியை கொண்டு ஓட்டி சென்று கொஞ்ச து◌ாரத்தில் விட்டு வர ஒரு சிலர் இவ்விடத்தில் விடாதிர்கள் ஜனங்கள் நடமாட கூடிய இடம் என்று கூறினர்.
       அன்னையே கையில் வைத்திருந்த இந்த கொய்ய மர குச்சியில் ஏறிக் கொள்ளுங்கள் என்று வேண்டுதல் செய்ய நாகம் அந்த குச்சியில் மூன்று சுற்று சுற்றி படமெடுத்த வண்ணம் அமர்ந்து கொண்டது. அதை து◌ாக்கி கொண்டு அவ்வூர் வடபுறத்தில் வெள்ள கேட்டுக்கு அருகில் உள்ள அதிதி முகவனும், அங்காளம்மனும் பழமை கொண்டுள்ள அரசு வேம்பு மரத்தடியில் கொண்டு விடவும் அப்பொழது ஓடாமல் இறங்கிச் சென்று படமெடுத்து மரத்தடியில் அமர்ந்து கொண்டிருக்கும் பொழது இராஜரஜேஸ்வரி அம்மையாருக்கு அருள் உணர்ச்சி வயப்பட்டு அம்மரத்தை சுற்றி வரவும், நாகமும் அவரை பார்த்த வண்ணமாகவே இருக்க இந்த அதிசயத்தை கண்ட சிலர் முட்டையும், பாலும் கொண்டு வந்து வைத்து வணங்க சில மணி நேரத்தில் காட்சியளித்த நாக சர்ப்பம் அங்கிருந்து மறைந்து சென்றது.
      பின்னர் அம்மையார் வீட்டுக்கு வந்த பிறகும் அருள் உணர்ச்சியாகவே இருந்து வர முன்றாம் நாள் இரவில் தரிசனம் தந்து, உலகமாதா அன்னை பரமேஸ்வரி நாகமுத்து சக்தி என்ற பெயருடன் கலியுக அவதாரம் பெற்றுள்ளேன். இனி வரும் நாட்களில் மகிமை பல புரிந்து காட்டுவேன். நீ உன்னை நாடி வருபவருக்கு கொய்யா இலை கொண்டு மந்திரித்து விடு. அவர்களுடைய அனைத்து தோஷங்களையும் துன்பங்களையும் நீக்குவேன். தோஷ நிவர்த்தி அடைய அருள் பெற்றுவர்கள் மட்டுமே அவர்கள் மனதில் தோன்றி உன்னை தரிசிக்க வரவழைப்பேன். மேலும் சக்தி பூஜைகளை செய்து மக்களுக்கு தொண்டாற்றி வா என்று கூறி கருட தரிசனமும் கொடுக்க 1966 முதல் மக்களுக்காக ஆன்மிக தொண்டாற்றி வருகிறார்.
      கடந்த 51 வருடங்களாக இராஜராஜேஸ்வரி அம்மையார், தனது சொந்தங்கள், உறவினர்கள் மற்றும் ஆன்மிக நண்பர்கள் துணை கொண்டு அவரது தலைமையில் செவ்வனே எந்த வித பாகுபாடும் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் ஆன்மிக தொண்டாற்றி வருகிறார். தற்பொழது இச்சேவையை இராஜராஜேஸ்வரி அம்மையார் தலைமையில் மூன்றாவது தலைமுறையாக அவரது பேரன் க.சிவா அவர்கள் நிர்வாக பொறுப்புகளை கவனித்து வருகிறார்.
      ஆகவே பக்த கோடிகள் குடும்பத்தோடு வந்து நாகசக்தி அம்மனை தருசித்து அருளொளி வணக்கமாக வத்தி, சூடம், விளகேற்றி வைத்து அம்மன் துதி பாடி அன்னையின் அருட் பிரசாதம் பெற்று பயனைடய வேண்டுகிறோம். அன்னதானத்திற்கு நன்கொடை வரவேற்கபடுகிறது.
நன்றி
இப்படிக்கு
G.Shiva D.C.Tech.,BBA.,
Managing Director,
CGS Infotech,
Rasipuram