SRI NAGASAKTHI AMMAN THAGAVAL MAIYAM
ஶ்ரீ நாகசக்தி அம்மன் தகவல் மையம்
WWW.SRINAGASAKTHIAMMAN.COM / WWW.SAKTHIMATRIMONY.NET
செல்: 97151 86112
Mail: srinagasakthiamman@gmail.com
ஆன்மிக செய்திகள்
# சனாதன தர்மத்தின் அடிப்படை போதனைகளுள் ஒன்று கர்மநியதி. கர்மா என்றால் வினை என பொருள்படும்.
வினை என்றால் செயலாகும். ஆகவே, கர்மா என்றால் செயல். கர்மநியதி ஒரு பிரபஞ்சநியதி (universal law).
→ கர்மா (காரணம் – விளைவு)
கர்மா என்ற பிரபஞ்சநியதி, காரணம் மற்றும் விளைவு ஆகிய இரண்டின் அடிப்படையில் செயல்படுகின்றது. ஒரு செயலின் காரணம் நன்மையானதாக இருந்தால், அந்த செயல் நன்மையை விளைவிக்கும்.
அதுவே ஒரு செயலின் காரணம் தீமையானதாக இருந்தால், அந்த செயல் தீமையை விளைவிக்கும்.
→ மூன்றுவகை கர்மா கர்மா மூன்று வகைப்படும். அவை:
1) சஞ்சித கர்மா – முந்தைய பல பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள நல்ல மற்றும் தீய கர்மாக்களின் மொத்த மூட்டை தான் சஞ்சித கர்மா. 2) பிராரப்த கர்மா – சஞ்சித கர்மாவின் ஒரு சிறுபகுதி தான் பிராரப்த கர்மா. இது இந்த பிறவியில் அனுபவிக்கவேண்டிய நல்ல மற்றும் தீய கர்மபலன்கள். 3) ஆகாமி கர்மா – இந்த பிறவியில் செய்யும் நல்ல மற்றும் தீய கர்மாக்கள் ஆகமி கர்மா எனப்படும். இவை பிறவியின் இறுதியில் சஞ்சித கர்மாவோடு சேர்க்கப்படும்.
→நல்ல கர்மா மற்றும் தீய கர்மா
இதுதான் நல்ல கர்மா, இதுதான் தீய கர்மா என்று நிலையாக கூறிவிட இயலாது. செயல் என்பது இடம், சூழ்நிலை ஆகியவற்றை பொறுத்து வேறுபடும். ஒருவன் தன்னுடைய செயலின் காரணம் நன்மையானதா தீமையானதா என்று ஆராய்ந்து அறியும் பக்குவத்தை சனாதன தர்மம் புகட்டுகின்றது.
அதற்காக தான் பல புராணங்களும் இதிகாசங்களும் இந்துதர்மத்தில் உள்ளன. மற்றவர்களின் செயல்களால் நாம் கற்றுக் கொள்ளும் பாடம் அளப்பரியது.
கர்ணனை பலர் மத்தியில் கேலிசெய்து அவமானப்படுத்தினாள் திரௌபதி, அந்த கர்மவினையின் விளைவால் அவள் பலர் மத்தியில் அவமானப்பட நேரிட்டது.
ஒருதீங்கும் இளைக்காதவனை சுட்டுக் கொல்வது தீய கர்மா, ஆனால் நாட்டையே அழிக்கும் நோக்கத்தில் செயல்படும் தீவிரவாதியை ஒரு ராணுவவீரன் கொல்வது தீயகர்மா ஆகாது.
ஏனென்றால், ஒரு ராணுவவீரனின் கடமை என்ன? நாட்டுமக்களைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றவேண்டும் என்பதே.
அவனின் கடமையிலிருந்து அவன் பின்வாங்கினால், அதுதான் அவனுக்கு தீயகர்மா. இதனால் தான் திருவள்ளுவர், கொல்லாமை எனும் அதிகாரத்தில் ஓருயிரையும் கொல்லக் கூடாது என்றும்; செங்கோன்மை எனும் அதிகாரத்தில் ”கொடியவர்களைக் கொலைத் தண்டனையால் அழிப்பது பயிர்களைக் காக்க களையைப் பிடுங்குவது போல” எனக் குறிக்கிறார். திருவள்ளுவர் முரணான கருத்துகளைக் கூறுவாரா? இல்லை.
கொல்லாமை எனும் அதிகாரத்தை சன்னியாசிகளுக்கும், செங்கோன்மை எனும் அதிகாரத்தை அரசர்களுக்கும் இயற்றியுள்ளார்.
எந்தவொரு உயிரையும் கொல்லக் கூடாது என்பது சன்னியாசிகளின் தர்மம்; நல்லவர்களைக் காப்பதற்காக தீயவர்களை அழிக்கவேண்டும் என்பது அரசனின் தர்மம். (அரசன் – நாட்டின் தலைவன்; சன்னியாசி – உலகவாழ்வை துறந்தவன்) ஆகவே, ஒரு செயலை விட அந்த செயலின் பின்னால் இருக்கும் காரணம் தான் மிக முக்கியமாகும்.
ஒரு செயலை எந்த காரணத்திற்காக செய்கிறோம் என்பதை ஆராயவேண்டும். அந்த செயல் சுயநலமற்றதாக இருக்கவேண்டும்; எந்த அப்பாவி உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காததாக இருக்கவேண்டும்; தர்மநியதிகளையும் இயற்கைநியதிகளையும் மீறாதபடி இருக்கவேண்டும்; சட்டவிதிமுறைகளை மீறாதபடி இருக்கவேண்டும்.
→ கர்மாவும் மறுபிறப்புச் சுழற்சியும்
ஒவ்வொரு ஆன்மாவும் தன்னுடைய செயலின் விளைவுகளை அனுபவித்து, அதனால் பக்குவநிலை அடையவே மீண்டும் மீண்டும் பூலோகத்தில் பிறப்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆன்மாவும் செயல்களின் நல்ல மற்றும் தீய விளைவுகளை அனுபவித்து தீரவேண்டும் என்பது பிரபஞ்சநியதி. சில ஆன்மாக்கள் வரம்புமீறிய தீயசெயல்களின் விளைவுகளை அனுபவிக்க நரகலோகங்களுக்கும், அளவற்ற நற்செயல்களின் விளைவுகளை அனுபவிக்க சொர்க்கலோகங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
பிறப்பெடுக்கும் ஆன்மாக்கள் செயலின்றி இருத்தல் இயலாது. செயல் புரியும் பொழுது அதன் வெளிப்பாடு நல்வினை - தீவினைகளாக உருவெடுத்துப் பின் ஆகாமி வினையில் சேர்க்கப்படுகிறது. நல்வினைகள் - தீவினைகள் ஆகிய இரண்டுமே பிறவியில் ஆழ்த்தவல்லது. முக்தி நிலையான பிறவாமைக்கு இவ்விரு வினைகளும் தடைக் கற்கள். இவ்விரு வினைகளையும் ஒழித்தலே முக்திக்கான வழியாம்.
வினைகளின் பலனை அனுபவிக்க பிறப்பெடுத்தே தீர வேண்டும். அது நல்வினைக்கு கிடைக்கும் நற்பலனாகவும் இருக்கலாம், தீவினைக்கு கிடைக்கும் தீயபலனாகவும் இருக்கலாம்.
ஒவ்வொரு ஆன்மாவும் ஏற்று வரும் பிராரப்த கர்மாவை (அதாவது இப்பிறவியில் தீர்த்து முடிக்க வேண்டிய கர்மாக்கள்) பிறவிக் காலத்திற்குள் முழுவதும் அனுபவித்து விடுகிறது. எனினும் ஆகாமிய வினைகளும் (அதாவது இப்பிறவியில் ஆன்மாக்களின் நல்வினைகள்-தீவினைகள்) பெரும் அளவு சேர்ந்து முடிவில் சஞ்சித வினையாக மாறுவதால் சஞ்சித வினைக் குவியல் என்றும் தீர்வதில்லை.
சஞ்சித வினைகள் முழுவதுமாக அனுபவித்துத் தீர்க்கப்படும் வரை ஆன்மாக்களுக்கு பிறவி தொடர்ந்து வரும். பிறவிகளுக்குக் காரணம் கர்மா. கர்மாவுக்குக் காரணம் பிறவிகள். பிறவிச் சுழற்சி என்று பகவத் கீதை இதையே குறிக்கிறது. எண்ணற்ற பிறவிகளுக்குப் பின்னரே ஒரு ஆன்மாவுக்கு மானிடப் பிறவி வாய்க்கிறது என்றும் சாத்திரம் அறிவிக்கிறது. ஆயினும், எப்படி கர்மாக்களை எல்லாம் அழித்து பிறவாமை எனும் நிலையை அடைவது?
பகவத் கீதையில் பகவான் அதற்கான வழியை மிகவும் அழகாக எடுத்துரைக்கிறார்.
எல்லோர்க்கும் நன்மை பயக்கும் காரணங்களை உடைய செயல்களையே புரியவேண்டும். அந்த நற்செயல்களின் பலன்களைத் துறந்துவிட வேண்டும். நல்ல காரியங்கள் செய்வது பின்னாளில் எனக்கு நற்பலன்கள் வருவதற்காக என்று கருதாமல், நல்ல காரியங்கள் செய்வது என்னுடைய ஆத்மதிருப்திக்காக என்ற எண்ணத்தை முழுமையாக கொண்டிருக்க வேண்டும்.
செயல்களின் பலன்களை எல்லாம் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட வேண்டும்.
இதனால் நம்முடைய கர்மப் பலன்களை எல்லாம் இறைவனே பொறுப்பேற்றுக் கொள்கிறார். இதனால் தான், கண்ணன் கர்ணனிடம் வந்து கர்ணன் ஆற்றிய நற்தொண்டுகளுக்கான பலன்களை எல்லாம் தானமாக கேட்டான். தான் ஆற்றிய நற்தொண்டுகளின் பலன்களை எல்லாம் கர்ணன் இறைவனுக்கே தானமாக கொடுத்துவிட்டு, கர்மங்கள் எல்லாம் தீர்ந்து முக்திநிலை அடைந்தான்.


# கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையே இப்பதிவு.
1. நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்?
2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன் வாழ்கின்றார்கள்?
3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம் ஏற்படுகின்றது?
4. கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க வேண்டுமா?
போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே இப்பதிவு.
பதிவிற்குள் செல்வதற்குமுன் ஒரு கதையை பார்த்துவிடுவோம்.
சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக இருந்தபோதிலும் அவனுக்கு வாய்ந்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது.
வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை தியானத்திலும் பிராத்தனையிலும் செலவிட்டான். எந்த அளவிற்கு அவன் பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டன.
அதே ஊரில் அவனுக்கு வித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான். தனது இன்பத்திற்காக எந்த ஒரு கொடுமையான செயலையும் குணமுடையவனாக அவனிருந்தான்.
அவனுக்கு நல்ல குணமுடைய பக்தியில் சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள். இருப்பினும் அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது துளிகூட இல்லை. அவனுக்கு சித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்வது என்பது வாடிக்கையான வேலை.
இதன் காரணமாக ஒரு கட்டத்தில் இருவரிடையே சண்டையே வந்துவிட்டது.
கோபத்தில் வெகுண்டெழுந்த சித்தன் இறைவன்மீது தனது பக்தி உண்மையாயிருந்தால் இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய் என்று சாபமிட தொடங்கினான். சிரித்துக்கொண்ட வித்தன் அப்படி நடக்கவில்லை என்றால் நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும் என்ற சவாலுக்கு இழுத்தான்.
இதற்கு ஒப்புக்கொண்ட சித்தன் தீவிரமான பிராத்தனையில் ஈடுபட்டான்.
போட்டியின் கடைசி நாளும் வந்தது. அந்த நாளில் வித்தனோ காட்டிற்கு சென்று தேவைக்கு அதிகமான பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடி கொன்று விருந்திற்காக வீட்டிற்கு எடுத்து வந்து கொண்டிருந்தான். வரும்வழியில் களைப்பு தாங்காமல் ஒரு மரதினடியில் ஓய்வெடுக்க உட்கார்ந்தான். உட்கார்ந்த இடத்தில் எதோ உருத்துவதுபோல் இருந்ததனால் என்ன? என்று விலக்கி பார்த்தான். கணக்கிட முடியாத செல்வம் அங்கு புதைக்க பட்டிருந்ததை பார்த்து, அதையும் மூட்டையாக கட்டிக்கொண்டு இரட்டை சந்தேஷத்துடன் வீடு திரும்பினான்.
இதற்கிடையே வயலில் வேலை செய்துகொண்டிருந்த சித்தனை மாடு முட்டி கடுமையான காயங்களுடன் படுத்தபடுக்கை ஆக்கிவிட்டது விதி. இப்படி ஒரு முட்டாள் கணவனுடன் வாழ்வது அசிங்கம் என்று சித்தனின் மனைவி அவனைவிட்டு நீங்கினாள்.
தனது நிலையை நினைத்து உள்ளும் வெளியும் ஒவ்வொரு நொடியும் அழுதே தீர்த்தான். தான் பட்ட அவமானத்தால் இனி வாழ்ந்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்தான் சித்தன். உடல் ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்து கொள்ள முடியவில்லை.
எப்படியோ எழுந்து தன் விட்டிற்கு பின்னாடியுள்ள கிணற்றில் குதித்தான். திடீரென்று தன்னை யாரோ தூக்குவது போல் உணர்ந்தான். ஆம் எந்த தெய்வத்தை அவன் பக்தியுடன் வணங்கினானோ அதே தெய்வம் அவனை காப்பாற்றி காட்சியும் கொடுத்தது. உடலாலும் மனதாலும் அவதிப்பட்ட அவனுக்கு வணங்க தோன்றவில்லை, மாறாக சண்டை போட தொடங்கினான். தனது ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் கொட்டி தீர்த்தான்.
அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுகொண்டிருந்த கடவுளோ அவனை தன்னோடு அனைத்து கொண்டார். அவரின் அரவணைப்பால் சற்று ஆறுதல் பெற்றான் சித்தன். இப்பொழுது கடவுள் பேச தொடங்கினார், சித்தா நீ இப்பிறவியில் நல்லவனாக பிறந்திருந்தாலும் முன்பிறவியில் வித்தனை விட கொடுமைகாரனாக இருந்தாய். நீ உன் மனைவியை மதித்தது கூட கிடையாது. மாறாக வித்தனோ முன்பிறவியில் நல்ல காரியங்களையே செய்து வந்தான், அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகல நன்மைகளும் கிடைத்தது. மாறாக உனக்கோ நீ செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது.
என்னை அனுதினமும் நீ வணங்கியதால் நீ அனுபவிக்க வேண்டிய கர்மத்தின் பெருபாலனவையை நானே ஏற்றுகொண்டேன்,.மாறாக நீயோ அதில் சிறு பகுதியையே அனுபவிக்கின்றாய். ஆன்மீகத்தை தொடங்கும் ஒருவன் முதலில் அவனது பாவபதிவையே அனுபவிக்க தொடங்கின்றான், மாறாக அக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன் செய்த புண்ணியங்களை அனுபவித்தபின் அவன் பாவபதிவுகள் செயல்பட தொடங்கும்.
வித்தனுக்கு கிடைத்த புதையலே அவனுடைய கடைசி புண்ணிய பதிவாகும். அவன் செய்த அனைத்து புண்ணியங்களும் ஒட்டுமொத்தமாக செயல்பட்டு அவனுக்கு புதையலாக கிடைத்தது. இதுவரை நீ அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்து பாவங்களும் கரைந்துவிட்டன. இனி நடக்கவிருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்து தெரிந்து கொள் என்று சில அறிவுரைகளையும் கூறி மறைந்தார் கடவுள்.
நாட்கள் செல்ல செல்ல சித்தனின் உடல்நிலை நலம் பெற தொடங்கியது. அவனது நெருங்கிய உறவினருக்கு வாரிசு இல்லாததால் அவரது சொத்துக்கள் அனைத்தும் சித்தனுக்கு கிடைத்தது. நல்ல குணமுடைய மனைவியும் சித்தனுக்கு அமைந்தாள். அதே சமயத்தில் வித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி படுத்தபடுக்கையாகி விட்டான். அவனது மனைவியும் திடீரென்று இறந்துவிட, அவன் கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன் சொத்துக்கள் அனைத்தையும் பரித்துக்கொண்டு வெளியே துரத்திவிட்டனர்.
தனது நண்பனின் நிலை அறிந்து வருந்திய சித்தன், வித்தனையும் தன் இல்லத்திலேயே தங்க செய்து உதவினான்.


# கடவுளே! எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை? எனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம்?
கடவுளே! எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை? எனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம்? கெட்டவனெல்லாம் நல்லா இருக்கானே! என்ற எண்ணங்கள் மாறி உங்கள் தவறுக்கான வினைகள்தான் தற்போது நீங்கள் அனுபவித்துவரும் கஷ்டங்கள் என்ற ஆழமான புரிதல் ஏற்படும்.
புரிதல் ஏற்படும்போது எதையும் ஏற்றுகொள்ளும் பக்குவம் வந்துவிடும். அப்படிப்பட்ட பக்குவத்தை நீங்கள் அடையும்போது, உங்களின் 95% கர்மங்களை உங்களுக்காக வேறு ஒருவர் அனுபவித்து விடுவார். காரணம்!!
நீங்கள் அவர்மீது கொண்டுள்ள அதிகப்படியான அசைக்கமுடியாத நம்பிக்கையே ஆகும். அந்த அவர் ஏற்கனவே பிறவிக்கடலை கடந்தவராக இருப்பார்.
ஞானி ஒருவர் கூட்டம் நிறைந்த ஒரு தெரு வழியே சென்று கொண்டு இருந்தார். திடீர் என்று அங்கே உள்ள சாக்கடையில் குதித்துவிட்டு பக்கத்தில் உள்ள தண்ணீர் குழாயில் காலை கழுவிவிட்டு சென்றுவிட்டார். இதை பார்த்தவர்களுக்கு அவர் பைத்தியகாரன் என்று தோன்றலாம்.
ஆனால் அவரை பொறுத்தவரை பொருளுக்கும் அவருக்கும் தொடர்பை ஏற்படுத்தி கொள்வது ஆகும். ஆனால் அவர் ஏற்படுத்திய தொடர்பு அவருடையது அல்ல!! அவரை நம்பி இருப்பவர்களின் கர்மவினைகளை தான் அவர் அச்செயலின் மூலம் தீர்த்து வைக்கின்றார்.
இது எப்படி சாத்தியம்?? என்ற கேள்வி வரலாம்!! அந்த ஞானியை பொறுத்தவரை அவர் செய்யும் எந்த செயலுக்கும் வினை என்ற ஒன்று ஏற்படுவது கிடையாது.
காரணம்? அவர் உள்ளே வெறும் வெற்றிடம் தான் உள்ளது.
அதாவது அவருக்கு மனம் என்ற ஒன்று கிடையாது!! உள்ளே சூன்யமாக தான் இருக்கும்!! அவரிடம் எந்த எண்ணங்களும் உதிப்பதும் கிடையாது!! மறைவதும் கிடையாது!! இதுவே " சும்மா இருப்பது " என்று சொல்லப்படுகின்றது.
ஒருவன் அவர்மீது கொண்டுள்ள தீவிர பக்தியால் அந்த வெற்றிடத்தில் இவனது எண்ணங்கள் சுற்றிகொண்டிருக்கும். இவனுக்கு அன்று சாக்கடையில் விழுந்து அடிபட வேண்டும் என்ற விதி இருக்கும், ஆனால் இவன் உண்மையாக இருப்பதால் இவனுக்கு பதிலாக அந்த ஞானி அந்த விதியை முடித்து வைக்கின்றார்.
மேலும் அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவரின் எண்ண அலைகளும் அங்கே உள்ள வெற்றிடத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும். இவர்கள் தன் தவறை உணர்ந்து தனக்கு உண்மையாக நடக்க தொடங்கும்போது அந்த ஞானி எதோ ஒரு செயலின் மூலம் இவர்களின் பாவபுண்ணிய கணக்குகளை அழித்துவிடுவார்.
முடிவில் இவர்களும் அந்த ஞானியின் நிலைக்கே வந்துவிடுகின்றனர். அதனால் தான் ஞானிகள் அருகில் இருக்கும்போது எதையும் கேட்காதீர்கள் என்று கூறுவது. காரணம்!!
நீங்கள் கேட்டுதான் பெறவேண்டும் என்ற அவசியமே அங்கு கிடையாது. மாறாக நீங்கள் கேட்க நினைப்பது கூட சிறியதாக தான் இருக்கும். அவர் கொடுக்க நினைப்பதோ கணக்கில் அடங்காதவையாக இருக்கும். இதற்கு அவரிடம் பூரண சரணாகதி அடைந்தலே சிறந்தது ஆகும்.
இதில் பூரண சரணாகதி என்பது இனி அனைத்தும் உன் செயல் என பற்றுகளை துறப்பதுவே ஆகும்.
"நான்" என்ற எண்ணத்திற்கு பதிலாக இனி எல்லாம் "நீ" என்ற எண்ணத்தை கொண்டு வருவதே சரணாகதி.
அதற்குபிறகு உங்களுக்கென்று தனிப்பட்ட எந்தவொரு செயலும் இருக்காது, இருக்கவும் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவன் செய்வதாகவே இருக்க வேண்டும்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு தேவைகள் என்பது மாறிக்கொண்டே இருக்கும். அந்த தேவைகளுக்கு தகுந்தவாறு வேண்டுதல்களும் மாறிக்கொண்டே இருக்கும்.
ஆனால் ஆன்மீகத்தில் ஓரளவு புரிதல் உள்ளவர்களை பொருத்தவரை, அவர்களுடைய வேண்டுதல் என்பது அவர்கள் வாழ்நாளில் "ஒரே ஒருமுறை" தான் இருக்குமே தவிர ஒவ்வொரு முறையும் இருக்காது.
ஏனென்றால் அவர்கள் முடிவான ஒன்றை முதலிலேயே வேண்டியும் விடுவர். அந்த வேண்டுதலில் அத்தனையும் அடங்கியும் விடும். இதை புரிந்துகொள்ள ஒரு சிறு கதையை பார்ப்போம்.
ஒரு ஏழை தாயின் மகனுக்கு படிப்பு அவ்வளவாக வரவில்லை. அவளுக்கு தெரிந்ததெல்லாம் அவள் வழிபடும் தெய்வம் மட்டும்தான். தன் மகன் பரிட்சையில் தேர்ச்சி பெற்று நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது அவள் கனவு.
கடவுளிடமும் இதை குறித்து வேண்டுதல் வைக்கவே, மகனும் பரிட்சையில் தேர்ச்சி பெற்றான். ஆனால் இவனது வினை வேலை கிடைக்கவே இல்லை. மறுபடியும் கவலை கொண்ட தாய் வேண்டவே மகனுக்கு நல்ல வேலையும் கிடைத்தது.
சிறிது காலம்தான் சென்றது மகனுக்கு விபத்து ஏற்பட்டு படுக்கையில் இருந்தான். அத்தாய்க்கு தெரிந்ததெல்லாம் அவனே என்பதால் மறுபடியும் ஒரு வேண்டுதல்!!
இதுவே அத்தாய் கடவுளே "எனக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் கொடு" என்று ஒரே ஒருமுறை மட்டும் வேண்டியிருந்தால், அவள் வாழ்க்கை வசந்தமாகி இருக்கும்.
புரியும்படி கூற வேண்டுமென்றால் ஒருவனுடைய வேண்டுதல் என்பது நிரந்தரமான முடிவான ஒன்றாக இருக்க வேண்டும். அத்தாய் வேண்டியது எல்லாமே தற்காலிகமான தீர்வை தரக்கூடியது என்பதால் ஒவ்வொரு முறையும் வேண்ட வேண்டிய அவசியம் இருந்தது.
மேலும் எதிர்வரும் கர்மவினை இதுதான் என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கூடவே எனக்கு இந்த தேவை நிறைவேறினால் நான் நிம்மதியாக இருப்பேன் என்ற தவறான கணக்கை போட்டுக் கொண்டு தற்காலிக தீர்வை நாடுகின்றோம்.
உண்மையில் எந்த ஒன்றில் எல்லாம் அடங்குமோ!! அடக்கமோ!! அந்த ஒன்றை வேண்டுதலாக வைக்க வேண்டும். அப்படி அந்த வேண்டுதல் நிறைவேறும் பொழுது அவனுக்கு அனைத்தும் வசமாகி விடுகின்றது.
எனவே அவனது வேண்டுதல் என்பது ஒரே ஒருமுறையோடு முடிவடைந்து விடுகின்றது.
இதில் உங்களை சுற்றி உள்ளவர்களும் பயன் பெறுவர். எப்படியென்றால் உங்கள் அமைதியும் சந்தோஷமும் உங்களை சுற்றி உள்ளவர்களையும் சார்ந்தே உள்ளது.
உங்கள் தாய்க்கு உடம்பு சரியில்லை என்றாலோ, உங்கள் மனைவி கோபபட்டலோ, உங்கள்முன். ஒரு நாய் குட்டி கஷ்டப்பட்டாலோ, உங்களுக்கு பணக்கஷ்டம் ஏற்பட்டாலோ உங்களால் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க முடியுமா?? முடியாதல்லவா!!
எனவே உங்கள் அமைதி என்ற வேண்டுதல் நிறைவேற.உங்களை சார்ந்த மற்றும் உங்களை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை தரமும் நல்லவைகளாக மாற்றம் பெறகின்றன.
இப்பதிவு உங்களுக்கு தெளிவாக புரிந்தால் இறைவனை நோக்கிய உங்களது பிராத்தனையும் ஒருமுறைதான்!!


# அட்சய திருதியை பற்றி தெரிந்ததும் தெரியாததும்.
அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.
1. அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது.
2. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.
3. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
4. அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.
5. அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.
6. அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.
7. அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார்.
8. சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
9. பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.
10. அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.
11. ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும்.
12. அட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார்.
13. வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள்.
14. அரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.
15. ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும்.
16. வடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள்.
17. ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது.
18. பீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.
19. அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள்.
20. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.
21. அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
22. அட்சய திருதியை நாளில் தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
23. அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியை 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு `பொன்னன்’ என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.
24. ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.
25. அரிதான வேலையை சந்திப்பதை `அலப்ய யோகம்‘ என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.
26. அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு `அட்சதை’ என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்ஞறும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு `அட்சய திருதியை’ எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.
27. அட்சய திருதியை தினத்தை சமணர்கள் “அட்சய தீஜ்’’ என்றழைக்கிறார்கள்.
28. ரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.
29. அட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடைபிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார்.
30. மகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.
31. அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.
32. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு `அட்சய திருதியை’ நாளில் செய்யப்படுகிறது.
33. மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.
34. கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
35. தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
36. அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
37. வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும்.
38. மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.
39. ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.
40. அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.
41. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது.
42. அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், “கனகதாரை’’ நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள்.
43. அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும்.
44. அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.
45. அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.
46. அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும்.
47. அட்சய திருதியை தினத்தன்று சிவனே, அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால் நமசிவாய மந்திரம் அன்று முதல் சொல்லத்தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதி-பரமேஸ்வரரின் அருள் கிடைக்கும்.
48. அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.
49. கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள்.
50. அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
51. அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.
52. அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை `தர்மகடம்‘ எனப்போற்றுவர்.
53. அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது.
54. அட்சய திருதியை நாளில் `வசந்த் மாதவாய நம’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுங்கள். முக்கியமான ஒன்று… தானம் செய்ய உகந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்கி சேமிப்பில் இறங்குவது சாஸ் திரத்துக்கு உடன் பாடில்லை.
55. அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும்.
56. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும்.
57. புதன்கிழமை வரும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் பலன்களைத் தரும்.
58. ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.
59. ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.
60. மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.


# சித்ரா பௌர்ணமி விரதம் இருப்பது எப்படி?
பொதுவாக பௌர்ணமியானது மிகவும் விஷேசமான ஒன்றாகும். மாதம் தோறும் வருகின்ற பௌர்ணமியன்று விரதம் இருந்து தேவியை வழிபட்டு வந்தால் எல்லா செல்வங்களும் குறைவிலv்லாமல் கிடைக்கும். மற்ற மாதங்களில் வருகின்ற பௌர்ணமியைவிட சித்திரா பௌர்ணமியானது முக்கியமானதாகும். சித்திரை நட்சத்திரமும் சேர்ந்து வந்துவிட்டால் இன்னும் சிறப்பானதாகும்.
சித்ரா பௌர்ணமி விரதம் இருப்பது எப்படி?
# சித்ரா பௌர்ணமியன்று வீட்டை சுத்தம் செய்து பு+ஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து அரிசி மாவால் சித்ரகுப்தன் படம் வரைந்து கையில் ஏடும், எழுத்தாணியும் வரைய வேண்டும். சித்ரகுப்தா என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். அன்று உப்பில்லாத உணவுகளையே உண்ண வேண்டும்.
# மாலையில் பௌர்ணமி தினம் உதயமானதும் சித்ரகுப்தனுக்கு பு+ஜை செய்ய வேண்டும். தலைவாழை இலையில் சர்க்கரை பொங்கல் அல்லது வெண்பொங்கலை படைக்க வேண்டும். பயிற்றம் பருப்பு, எருமைப்பாலும் சேர்த்து பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம்.
# படையலுடன் எல்லாக்காய்கறிகளும் சேர்த்து செய்த கூட்டு நிவேதிக்க வேண்டும்.v தொடர்ந்து தீபாராதனை காட்டி ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் கொடுக்க வேண்டும். குளிர்ந்த பானகளைத் தயாரித்து சித்ரா பௌர்ணமியன்று நண்பகல் ஏழைகளுக்கு வழங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
# சித்ரா பௌர்ணமியன்று விரதமிருந்து சிவாலயங்களில் கிரிவலம் வர நாம் பாவவினைகளை போக்கி புண்ணியம் தேடிக் கொள்ள முடியும்.
விரத பலன்கள் :
# சித்ரா பௌர்ணமி விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும். ஆயுளை அதிகரிக்க செய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு. மேலும் மன அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்


# தாலிகளின் வகைகள்
தமிழ் கலாச்சாரத்தில் முக்கியமானது தாலி ஆகும். தமிழர் திருமணங்களில் தாலி கட்டுவதே முக்கியமான நிகழ்ச்சி ஆகும். தாலி கட்டும் நிகழ்வானது சங்க காலம் முதல் நடைபெற்று வருகிறது. இந்த தாலியானது பல வகைப்படுகிறது.
1. பெருந்தாலி
2. சிறுந்தாலி
3. தொங்கு தாலி
4. பொட்டு தாலி
5. சங்கு தாலி
6. ரசத்தாலி
7. தொப்புத் தாலி
8. உருண்டை தாலி
9. கருந்தாலி
10. ஜாகத்தாலி
11. இருதாலி
12. தாலிக்கட்டி ஆகியவை.
இதில் முதல் இரண்டும் மிக பிரபலமானவை.


# அம்மி மிதித்தல் தொடர்பான மற்றொரு கருத்து
மணமக்களிடையே ஊடற்காலத்தில் (சண்டையிட்ட காலத்தில்) சமாதானம் ஆக மனைவியின் காலையும் பிடிக்க வேண்டி வரும். அதற்காகத்தான் மனைவியின் காலை திருமணத்தின் போது அக்கினி சாட்சியாக கணவன் பிடிக்கிறான் என 18 ஆம் நூற்றாண்டு இலக்கியமான திருப்பேருர்ப் புராணம் கூறுகிறது.
தாலி கட்டி, மாலை மாற்றிய பிறகு செய்யும் சடங்கு சப்தபடி. அதாவது ஏழு முறை தீ வலம் வந்து, ஆண் பெண்ணின் காலை அம்மியில் வைத்து , உறுதி அளித்தல்.
1. முதல் படி : மணமக்கள் தங்கள் குல தெய்வத்தினை அழைத்தல்
2. இரண்டாம் படி : அவர்கள் இருவரும் தெய்வத்தினிடம் தங்கள் இல்வாழ்க்கை சிறப்பாக அமைய எங்களுக்கு மன உறுதியையும் , உடல் உறுதியையும் அளித்து, எங்களுடன் துணையாக இருப்பாய் என்று இறைவனை வேண்டுதல்.
3. மூன்றாம் படி : நாங்கள் இல்லற தர்மத்தில் இருந்து , அனைவருக்கு உரிய கடமையை செய்வோம். அதில் தவற மாட்டோம்.
4. நான்காம் படி : மணமக்கள் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்க இறைவனை வேண்டுதல் .
5. ஐந்தாம் படி : உலகில் உள்ள அனைவரும் நலமாக வாழவும், திருமணத்திருக்கு வந்து எங்களை ஆசீர்வதிக்கும் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவது.
6. ஆறாம் படி : உலகத்தில் பருவ நிலை தவறாது இயற்கை மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று வேண்டுவது.
7. ஏழாம் படி : இந்த திருமணத்தில் வரும் புண்ணியத்தை உலக நன்மைக்காக தானம் செய்வது .
இவை அனைத்தும், தீ வலம் வந்து மணமக்கள் கூறும் மந்திரத்தின் பொருளாகும்.
சிலப்பதிகாரம்
"சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன் மாமுது பார்ப்பான் மறை வழிகாட்டிடத் தீ வலம் செய்வது காண்பார்கன் நோன்பு என்னை"
மேலும்
"தீ வலம் சுற்ற கனாக் கண்டேன் தோழி"
என்ற ஆண்டாள் பாடலின் மூலம் அறியலாம்.


# திருமண வயது ,மணமக்கள் வயது தமிழ் மரபு கூறுவது என்ன ?
திருமண வயது , மணமக்கள் வயதை தமிழ் மரபு மூன்று முறையாக பிரித்தூள்ளது. அவை
சிற்றெல்லை
ஆண் = 16, பெண் = 12
இடையெல்லை
ஆண் = 20, பெண் = 16
பேரெல்லை
ஆண் = 25, பெண் = 20,
இதில் பேரெல்லை பருவம் முன் திருமணம் செய்ய வேண்டும் என்று மரபு கூறுகிறது.
"ஈகைவன் கொடியன்னாள் ஈராறு ஆண்டு அகவையாள்
இருநிதிக்கிழவன் மகன் ஈரெட்டு ஆண்டு அகவையான் "
என்ற சிலப்பதிகாரப் பாடலின் மூலம் திருமணம் நடக்கும் போது கண்ணகிக்கு 12 வயது, கோவலனுக்கு 16 வயது என்று அறியலாம்.

# சீதனம் கொடுத்தல் தமிழ் மரபு என்ன ?
சீதனம் கொடுக்கும் முறை இன்று நேற்றல்ல, சங்க காலம் முதல் இருந்து வந்திருக்கிறது.மன்னன் சோமசேகரன் தன் மகளை உக்கிரகுமாரற்கு திருமணம் செய்து வைத்த போது
முத்துவடம் கட்டிய வைர ஊஞ்சல்- 5
அன்னத்தூவி பெய்த மெல்லிய ஆடையால் செய்த அணை- 10
பாவை விளக்கு- 8
உணவை சமைக்கும் பொற்கலன்- 100
மணி பதித்த களஞ்சியம்- 7
பொற்காம்புகளுடைய சாமரை- 8
பசும்பொற்கிண்ணம் சூழ்ந்து விளங்க நடுவே பொற்காலுடன் கூடிய மாணிக்க பாத்திரம்- 100
முத்தாபரணம் வைக்கும் பேழை- 300
ஆயிரம் பொன் விலையுடைய மெல்லிய வெண்மையான துகில் அரிய பட்டாடை இவற்றையெல்லாம் வைக்க பேழை- 300
ஏவல் செய்ய சேடியர்- 700
விளைநிலம் கொண்ட ஊர்கள்- 3
செம்பொன்- 2 கோடி
ஆகிய பொருட்களை வரதட்சனையாக கொடுத்துள்ளான்.
அரும் பெறன் மகட்குச் செல்வ
வளமுற வரிசை யாக வழங்கினான்
என பரஞ்சோதியார் பாடுகிறார்.

# தமிழர் திருமண முறை என்ன ?
1. கொடை மணம்
பெண்ணை பெற்றோருக்கு பொருள், பணம், நிலம் கொடுத்து பெண்ணை மணக்கும் முறை, இது தானக் கொடை, விலைக்கொடை, நிலைப்பாடு கொடை என்று மூன்று வகைப்படும் .
2. காதல் மணம் : விருப்பம் உற்ற தலைவனும், தலைவியும் மணம் செய்து கொள்வது.
3. கவர்வு மணம் (வன்கோல் மணம்) : விருப்பம் இல்லாத பெண்ணை தூக்கி சென்று மணம் முடித்தல்.


# கையில் கங்கணம் எதற்காக கட்டப்படுகிறது. ?
எந்த ஒரு செயலை செய்வதற்க்கு முன் நாம் ஒரு நிர்ணயம் செய்து அதில் உறுதியாக இருக்கவேண்டும் . இப்படி ஆரம்பிக்கும் காரியம் தடை இல்லாமல் நடைபெற மந்திரம் ஓதி கையில் கங்கணம் கட்டப்படுகிறது.
"நற்றிசை தீர்த்தங்கள் கொணர்து நனி நல்கி
பார்ப்பனச்சிட்டர்கள் பல்லாரெடுத்தேந்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோ ரெண்றெண்ணை
காப்பு நான் கட்ட கனாக் கண்டேன் தோழி நான்" – ஆண்டாள்


# ஊஞ்சல் ஆடுதல் என்பது திருமணத்தில் சில சமூதாயங்களில் செய்யபடுவதன் மரபு என்ன ?
திருமணத்தின் போது ஊஞ்சல் ஆடுதல் சில வீடுகளில் நிகழ்த்தப்படுகிறது. இது ஏனெனில், வாழ்க்கை என்பது ஊஞ்சலைப்போல முன்னும் பின்னும் இருக்கும். சங்கிலி எப்படி மேலிருந்து தொங்குகிறதோ அதைப் போல, வாழ்க்கை என்பது மேலுள்ள இறைவனால் படைக்கப்பட்டது என்பதையும், அந்த வாழ்க்கையும் எப்போது வேண்டுமானாலும் அறுந்துவிடும் என்பதையும் உணர்த்துகிறது.


# கெட்டி மேளம் எதற்காக கொட்டப்படுகிறது. ?
கங்கணம் கட்டும் போதும், பந்தக்கால் நடும் போதும், தாலி கட்டும் போதும், மெட்டி போடும் போதும் கெட்டி மேளம் கொட்டப்படுகிறது. திருமணத்தில் மேற் சொன்ன நிகழ்வுகள் மிக முக்கியமானவை, திருமணத்திற்கு வரும் பலர் பல விதமான பேச்சுகளில் மூழ்கி இருப்பர். சிலர் அமங்கலமான வார்த்தைகளையும் பேசுவர். அப்படிப்பட்ட அமங்கலமான வார்த்தை மணமக்கள் காதில் விழாது இருக்கவும், அனைவரின் கவனமும் மணமக்கள் பக்கம் திரும்பி அவர்களை வாழ்த்தவும் கெட்டி மேளம் கொட்டப்படுகிறது.
இன்னும் சில வீட்டு திருமணங்களில் பல்லாங்குழி விளையாடுதல், பானைக்குள் இருந்து சங்கு எடுத்தல், மோதிரம் எடுத்தல் போன்ற விளையாட்டுகள் கணவன் மனைவி இடையே நடைபெறும். இது ஏனென்றால் தம்பதிகளிடையே ஒற்றுமையுணர்வை வளக்கவும், வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் மற்றும் விட்டுக் கொடுத்தல் போன்றவற்றையும் உணர்த்துகிறது.


# பெண்கள் அணியும் ஆபரணங்களுக்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் ?
1.மோதிரம் ..
மோதிர விரலில் பாயும் நரம்பு நம் மூளையிலிருந்து இதயத்திற்கு இணைக்கப்படுகிறது. நம்மைச் சந்தோஷப்படுத்தும் ஹார்மோன்களைத் தூண்டுவதற்கு கட்டை விரல் மோதிரங்கள் உதவுகின்றன. பெரும்பாலானவர்கள் நடு விரல்களில் மோதிரம் அணிவதில்லை. அவ்வாறு அணிந்தால், முடிவுகள் எடுக்கும் திறன் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான ஆண்கள் கூட தங்கள் விரல்களில் மோதிரம் அணிந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
2.தோடு ..
சிறு வயதில் காது குத்தி, தோடு போடும் வழக்கம் நம் கலாச்சாரத்தில் பின்னிப் பிணைந்துள்ளது. பெண்களுக்கு காது நரம்புகளுடன் கண்கள் மற்றும் உயிர் உற்பத்தி செய்யும் உறுப்புக்கள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. கண்களுடன் காது நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளதால், நல்ல கண் பார்வைக்கு தோடுகள் உதவுகின்றன.
3.மூக்குத்தி ..
மூக்குத்தி பெண் குழந்தைகளுக்குக் காது குத்தும் சடங்கு நடக்கும் போது, மூக்குக் குத்தும் படலமும் அரங்கேறுவது வழக்கம். வயதுக்கு வந்ததும், மாதவிடாயினால் தோன்றும் வலிகளைக் குறைப்பதற்காகவே அவர்களுக்கு மூக்குத்தி அணியப்படுகிறது. இடது மூக்கில் மூக்குத்தி அணிந்து கொள்வதால், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள நரம்பு உயிர் உற்பத்தில் செய்யும் உறுப்புக்களைத் தூண்டுகிறது. இதனால் குழந்தை பிறப்பும் எளிதாவதாகக் கூறப்படுகிறது.
4.தாலி (அ) நெக்லஸ் ..
தாலி (அ) நெக்லஸ் பெண்கள் தங்கள் கழுத்தில் நகைகளை அணிந்து கொள்வதால், அவர்களுக்கு அதிக பாஸிட்டிவ் எனர்ஜி கிடைக்கிறது. குறிப்பாக, தாலிகளில் அணிந்து கொள்ளும் ஒவ்வொரு சிறு அணிகலனும் பெண்களின் உடம்பையும் மனத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும், இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும் கழுத்தணிகள் உதவுகின்றன.
5.வளையல் ..
வளையல் சீரான இரத்த ஓட்டத்திற்கு, தங்கள் கைகளில் அணிந்து கொள்ளும் வளையல்களும் பெண்களுக்குக் கை கொடுக்கின்றன. அவை வட்ட வடிவில் இருப்பதால், வளையல்கள் மூலம் தூண்டப்படும் மின் காந்த ஆற்றல் யாவும் வீணாகாமல் உடலுக்குள்ளேயே செலுத்தப்படுகிறது. இதனால் அவர்களுடைய எனர்ஜி அதிகரித்து, உள்ளங்கைகளும் வலுவாகின்றன.
6.நெற்றிச் சுட்டி ..
நெற்றிச் சுட்டி தலையிலிருந்து தவழ்ந்து வந்து நெற்றியில் அழகாகக் குவிந்து விழும் இந்த ஆபரணம், உடம்பில் உள்ள வெப்பத்தைக் கட்டுப்படுத்துகிறது.
7.இடுப்பணி ..
இடுப்பணி பெண்கள் தங்கள் இடுப்பைச் சுற்றி ஒட்டியாணம் அல்லது அரைஞான் கயிறை அணிந்து கொள்வது வழக்கம். இந்த அணிகலன், அவர்களுடைய மாதவிடாய் பிரச்சனைகளைத் தீர்க்குமாம்! வெள்ளியினாலான இடுப்பணிகலன், வயிற்றுக் கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது.
8.கொலுசு ..
கொலுசு பூமியுடன் பெரும்பாலும் தொடர்பிலிருக்கும் கால்களில் பெண்கள் அணியும் கொலுசு, அது தரும் ஒலியின் மூலம் அவர்களிடம் பாஸிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்குமாம்! மேலும், எலும்பு இணைப்புகளில் தோன்றும் வலிகளை நீக்குவதிலும் கொலுசு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.
9.மெட்டி ..
மெட்டி இரு கால்களிலும் உள்ள கட்டை விரலுக்கு அருகிலிருக்கும் விரலில் மெட்டி அணியப்படுவது வழக்கம். பெண்களின் கருப்பையையும் இதயத்தையும் இணைக்கும் நரம்பு, இந்த விரல் வழியாகப் பாய்வதால், அவர்களுடைய மாதவிடாய் கால இரத்த இழப்பை சீராக்குவதோடு, பிரசவ காலத்திலும் உதவுகிறது. பொதுவாகவே, இரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்துவதில் மெட்டி ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.


# ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா?
எந்த ஒரு செயலை செய்வதற்க்கு முன் நாம் ஒரு நிர்ணயம் செய்து அதில் உறுதியாக இருக்கவேண்டும் . இப்படி ஆரம்பிக்கும் காரியம் தடை இல்லாமல் நடைபெற மந்திரம் ஓதி கையில் கங்கணம் கட்டப்படுகிறது.
ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா? இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம்.
பண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை கண்ட முன்னோர்கள். இவ்வாறு நிகழ என்ன காரணம் என ஆராய ஆரம்பித்தனர். இதுவே வானிவியல் ஆராய்ச்சிக்கு வித்திட்டது.
வானவியலே கிரகங்களின் பருமன் முதற்கொண்டு இயக்கத்தையும், பால்வெளியில் இருக்கும் நட்சத்திர கூட்டத்தையும் மற்றும் கிரகங்களின் கட்டமைப்பையும், நிறத்தையும் மேலும் பல முக்கிய பண்புகளை மிக துல்லியமாக அளவிட உதவியது. இப்படியாக வானவியலில் இருந்து அறியப்பட்ட கிரக இயக்கங்கள் பூமியில் இருக்கும் உயிரினங்களை எவ்வாறு பாதிக்கும் என்ற ஆராய்ச்சி தொடங்கப்பட்டது அதன் பெயரே ஜோதிஷம் எனும் ஜோதிடம்.
ஜோதிஷம் என்னும் சமஸ்கிருத வார்த்தையின் பொருள் கிரகங்கள் பிரதிபலிக்கும் ஒளி மூலம் மனித வாழ்வியலை ஆராய்ந்து அறிவது என்பதாகும். மனித வாழ்வியலின் வழிகாட்டி என்பதாலேயே ஜோதிடம் 'வேதத்தின் கண்' என்று அழைக்கப்படுகிறது.
சூரியன் மற்றும் சந்திரன் நகர்வுகளை கண்ணால் கண்டு ஆராய்ச்சி செய்து, கிரகங்களின் இயக்கம் நட்சத்திரங்கள் கொண்டு அளவிடப்பட்டு பஞ்சாங்கம் உருவாக்கப்பட்டது. பஞ்சாங்கம் என்பது வாரம், திதி, கரணம், நட்சத்திரம் மற்றும் யோகம் என்ற ஐந்து காரணிகள் ஆகும்.
புவி மைய கொள்கையை (Geo-Centric) அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது ஜோதிடக் கலையாகும். அதாவது பூமியை மையமாக வைத்து அதனைச் சுற்றி இருக்கும் கிரகங்களின் இயக்கம் எவ்வாறு உயிரினங்களின் இயக்கத்தையும் வாழ்வியலையும் பாதிக்கிறது என்பதை கூறுவதே இக்கலையின் நோக்கமாகும்.
கிரகமும் ராசியும்
கிரகம் என்ற சமஸ்கிருத வார்த்தையின் பொருள் பற்றுதல் அல்லது பற்றி இழுத்தல் என்பதாகும். பிரபஞ்சத்தில் பல நட்சத்திர கூட்டங்கள் இருந்தாலும், சூரியன் எனும் நட்சத்திரம் மட்டுமே நமது பூமியின் இயக்கத்தையும் மற்றம் ஒன்பது கிரகங்களையும் பெருமளவில் பாதிக்கிறது. அது போலவே நமது பூமியின் துணைக் கோளான சந்திரனின் இயக்கம் பூமியை மிக அதிக அளவில் பாதிப்பதால்தான் பூமியை சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவரும் சந்திரன் முக்கிய கிரகமாக எடுத்து கொள்ளப்பட்டு இருக்கிறது.
நமது பூமி 23°1/2 பாகை சாய்ந்து, தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனை சுற்றி கொண்டு இருக்கிறது என்பதை வானியல் கணிதம் மூலம் உணர்ந்தனர். இந்த பூமியின் சுழற்சி மூலம் தட்பவெப்பநிலை மாற்றங்கள் உண்டாவதையும் உணர்ந்தனர். இத்தகைய புவியின் இயக்கம் சூரியனின் ஈர்ப்பு விசையாலும் மேலும் அதை சுற்றி இருக்கும் கோள்களின் பாதிப்பாலும் ஏற்படுகிறது.
தட்ப வெப்ப நிலை மாற்றங்கள் என்பவை நீர் நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களில் மூலமே பூமியில் நிகழ்கிறது. இந்த பஞ்சபூதங்கள் மூலமே கிரகங்கள் மனிதர்களை இயங்குகின்றன. இரவு பகலாக கண்விழித்து பூமி சுற்றி வரும் பாதையில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களைக் கூறுகளாக்கி ராசி என்று பெயர் வைத்தனர்.மேலும் ராசிகளின் வடிவமைப்பைக் கொண்டு அதற்கு தகுந்த பெயரிட்டனர்.
ஜோதிடம் ஒரு அறிவியலா?
இவ்வாறாக வானவியலில் இருந்து ஜோதிடம் தோன்றியது. கிரக இயக்கங்களைப் பஞ்சாங்கம் கொண்டு கணித்து, மேலும் பல கணித சூத்திரங்கள் கொண்டு மனித வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை சொல்வதால் ஜோதிடம் ஒரு அறிவியலே என்று கூறுகிறார்கள்.