SRI NAGASAKTHI AMMAN THAGAVAL MAIYAM
ஶ்ரீ நாகசக்தி அம்மன் தகவல் மையம்
WWW.SRINAGASAKTHIAMMAN.COM / WWW.SAKTHIMATRIMONY.NET
செல்: 97151 86112
Mail: srinagasakthiamman@gmail.com
ஶ்ரீ நாகசக்தி அம்மன் கோவில் வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க விரும்புவோருக்கான பகுதி...
ஶ்ரீ நாகசக்தி அம்மன் கோவில்
வரக்கால்பட்டு
கோவிலுக்கு வளர்ச்சி பணிகளுக்காக...

கோவிலுக்கான பராமரிப்பு செலுவுகள் இது நாள் வரை இராஜேஸ்வரி அம்மையார் அவர்கள், தன் சொந்த நிலத்தில் வரும் வருமானம் கொண்டும், வீட்டு வாடகை மூலம் வரும் வருமானம் கொண்டும் கோயில் பராமரிப்பு வேலைகள் பார்த்து கொண்டார், நிலத்திலும் சரி, வீட்டு வாடகையும் சரி பெரிய அளவு வருமானத்தை அவர் பெற வில்லை. இன்றைய காலகட்டத்தில் வீட்டு வாடகை ( சராசரியாக ரூ.5000 மேல் செல்லுகிற வேலையில் ) வெறும் ரூ.750 மாதத்திற்கு இரண்டு வீட்டை வாடகை விட்டு அதில் வரும் பணத்தை கோயில் பராமரிப்பு செலவுக்கு பயன்படுத்தி வருகிறார். கோயில் உண்டியல் வைப்பதோ, கோயிலிக்கு நன்கொடை வசூலிப்பதோ அவருக்கு பிடிக்காத ஒன்று. ஒரு பக்கம் நல்ல விஷயமே என்றாலும் இவருடைய இந்த கொள்கையினால் கோயில் வளர்ச்சி என்பது பெரிய அளவில் இல்லை.

55 வருடங்களாக கோவில் பணி நடைப்பெற்றாலும், வரக்கால்பட்டு மக்கள் நாகசக்தி அம்மனின் சக்தியை உணர்ந்தவர்கள் என்றாலும் அம்மையாரின் கொள்கையால் அவரிடம் ஆசிர்வாதம் பெற்ற கோயில்கள் கூட இன்று பெரிய அளவில் உருபெற்று வளர்ந்து விட்டன. ஆனால் நாகசக்தி அம்மன் கோயில் 55 வருடங்களாக அப்படியே இருப்பதை உணர்ந்த அவரது பேரன் மென்பொருள் துறை மற்றும் கல்வி துறையில் பணியாற்றி வந்தாலும், 250 கிலோமீட்டர் தொலைவில் நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தில் வசித்து வந்தாலும் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் அதிகாலை 3 மணிக்கு கிளம்பி வரக்கால்பட்டு வர 6 மணி நேரம் பயணம் மேற்கொண்டு வந்து கோயில் நிர்வாகத்தை வந்து பார்வையிட்டு செல்வதோடு, கோயில் வளர்ச்சிக்கான அனைத்து வேலைகளையும் தானே களத்தில் இறங்கி வேலைகள் செய்து வருகிறார். கோயிலை சுத்தம் செய்வது முதற்கொண்டு, வேலி அமைத்தல், மரம் நடுதல் போன்ற அனைத்து வேலைகளையும் தானே இறங்கி கோயிலுக்காக செய்து வருகிறார்.

நாகசக்தி அம்மன் வளர்ச்சி பெறவே உருவாக்க பட்டதுதான் ஶ்ரீ நாகசக்தி அம்மன் தகவல் மையம். வரன் தேடுவோர் www.srinagasakthiamman.com என்கிற இவ்விணையதளத்தில் பதிவு செய்து கோவில் வளர்ச்சிக்கு உதவலாம். அல்லது வரன் தேடுவோருக்கு இவ்விணையதளத்தின் முகவரியை கூறியும் கோயில் வளர்ச்சிக்காக உதவலாம்.

நாகசக்தி அம்மன் கோவில் வளர்ச்சிக்கு நேரடியாக பங்கு பெற விரும்புவோர் மரகன்றுகள் அளித்தோ, வேலி அமைக்க மணல்,சிமெண்ட், செங்கல் தந்தோ உதவலாம்.

நாகசக்தி அம்மன் கோவில் வளர்ச்சிக்கு நேரடியாக பங்கு கொள்ள இயலாதாவர்கள். ரூபாய் ஒன்று முதல் நீங்கள் விருப்ப படிகிற உங்களால் இயன்ற தொகையை எவ்வளவு வேண்டுமென்றாலும் வழங்கலாம். யார் யார் எவ்வளவு தொகை செலுத்தி இருக்கிறார்கள் என்பதை இணையதளத்திலே வெளியிடபடும். அனைத்து வரவு செலவு கணக்குகளும் வெளிப்படை தன்மை கொண்டாதாக இருக்கும்.

தற்பொழது உள்ள நிலையில் கோவில் வளர்ச்சிக்கு... 2018 ஆண்டிற்குள் நாங்கள் மேற்கொள்ள இருப்பது...

  • கோயிலை சுற்றி மரம் நடுதல்
  • கோயிலுக்கு வேலி அமைத்தல்
  • கோயிலுக்கு இரும்பு வாயிற்கதவு அமைத்தல்
  • கோயில் சுற்றுசுவர் மேம்படுத்துதல்
  • கோயிலுக்கு வெள்ளையடித்தல்
  • கோயிலுக்கு ஒலிபெருக்கி பக்திபாடல்கள் பாட அமைத்தல்
  • கோயிலுக்கு மேலதாளம் அடிக்கும் கருவி பொருத்துதல்
  • கோயில் பராமரிப்பு கருவிகள் வாங்குதல்

கோயில் படங்கள் பார்க்க விரும்புகிறவர்கள் Click Here

அன்னதானம் பணிகளுக்காக...

கோயில் வாரம்தோறும் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் பூஜைகள் முடிந்த பிறகு குறைந்தது 10 நபருக்கு அன்னதானம் வழங்கவேண்டும் எனவும் முடிவு செய்யபட்டுள்ளது. தற்பொழது கோயில் விழா நடைபெறும் சமயங்களில் மட்டும் அன்னதானம் கோயில் வரும் பக்தர்களுக்கு 50 நபர்களுக்கு வழங்கபடுகிறது. கோவில் அன்னதானம் தர விரும்புகிறவர்கள் ஒரு நபருக்கான சாப்பாடு செலவு 30 என கணக்கிட்டு 10 நபருக்கு ரூ.300 எங்கள் வங்கி கணக்கில் செலுத்தலாம். வாரந்தோறும் செய்யபடும் பூஜையில் உங்கள் பெயரிட்டு அன்னதானம் வழங்கபடும். கோயில் விஷேங்களுக்கு 100 நபருக்கான அன்னதானம் தொகையாக ரூ.3000 செலுத்தலாம்.

இலவச திருமணத்திற்காக...

ஆண்டுதோறும் நடைபெறும் நாகசக்தி அம்மனின் கலியூக திருவிழாவன்று வசதி வாய்ப்பு இல்லாதவர்கள்.. தங்களுக்கு திருமணம் நடைபெறும் வேண்டுமென்றால். ஶ்ரீ நாகசக்தி அம்மன் திருமண தகவல் மையத்தில் இலவச பதிவு செய்து கொள்ளும் வசதி செய்யபட்டுள்ளது. அதில் பதிவு செய்யும் வரன்களில் எளியவர்களுக்கு இலவச திருமணம் செய்து வைக்கபடும். இலவச திருமண விழாவிற்கு நன்கொடைகள் அளிக்க விரும்புவோர் ஒருவருக்கு திருமணம் நடைபெற 1 கிராமில் தங்க தாலி, வேஷ்டி மற்றும் சட்டை நன்கொடையாக வழங்கலாம் அல்லது ஒருவருக்கான திருமண செலவாக ரூ.10000 வழங்கலாம். திருமணம் நடைபெறும் பொழது திருமண தம்பதிகளிடம் உங்கள் பெயரை சொல்லி தாங்கள் வழங்கிய நன்கொடையில் திருமணம் நடைபெற்றதற்கான சான்றிதழை மணமக்களுக்கு அளிக்கப்படும்.

கல்விக்காக...

எழை மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் கல்வி தொடர இயலாதவர்கள் மேற்படிப்பு படிக்க விரும்புவோர்க்கு உதவிதொகை வழங்கும் பொருட்டு ஆண்டுதோறும் ஜீன் மாதத்தில் கல்வி உதவிதொகை வழங்கபடுகிறது. இவ்வுதவி தொகை பெற விரும்புவோர் ஶ்ரீ நாகசக்தி அம்மன் கோயிலில் உதவிதொகைக்கான விண்ணப்பத்தை அளிக்குபடி கேட்டு கொள்கிறோம். இதன் படி எழை எளிய மாணவர்கள் கல்வி பெற அன்பர்கள் தங்களால் இயன்ற உதவியை நோட்டு புத்தகங்களாகவோ, சீருடைகளாகவோ, கல்வி தொகையை சம்பந்த பட்ட பள்ளி / கல்லு◌ாரிக்கு எங்கள் மேற்பார்வையில் வழங்கலாம். அல்லது கல்வி உதவி தொகை நன்கொடை செலுத்த விரும்புவோர். கீழே கொடுக்கபட்டுள்ள வங்கி கணக்கில் உங்கள் உதவிதொகையை பணமாக செலுத்தலாம்.

மாற்றுதிறனாளிகள்...

மாற்றுதிறனாளிகள் தங்களுக்கு தேவையான உபகரணங்களை இலவசமாக பெற்று கொள்ளும் வகையில் தாங்கள் தங்கள் பெயர் விபரங்களை ஶ்ரீ நாகசக்தி அம்மன் கோவிலில் பதிவு செய்து கொள்ளலாம். மாற்றுதிறனாளிகள் நன்கொடை அளிக்க விரும்புவோர் மாற்றுதிறனாளிகள் பயன்படுத்த கூடிய உபகரணங்களை நன்கொடையாக வழங்கலாம். அல்லது பணமாகவும் எங்கள் வங்கி கணக்கில் செலுத்தலாம். மாற்றுதிறனாளிகள் உபகரணங்களை வழங்கும் பொழது உங்கள் அன்பளிப்பில் வழங்கபட்டது என்பதற்கான சான்றிதழ்கள் அவர்களுக்கு வழங்கபடும்.

ஏழைகள் மருத்துவ செலவுகளுக்கு...

இன்றைய காலகட்டத்தில் மருத்துவ செலவுகள் மிக பெரிய அளவில் சென்று கொண்டிருப்பது நடுத்தர மக்களின் உழைப்பை ஒரே நாளில் உறிஞ்சி எடுத்து விடுகிறது. அவர்களுக்கு உதவும் பொருட்டு எழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிசெய்ய விரும்பும் மருத்துவர்கள் நாகசக்தி அம்மன் கோயிலில் தாங்கள் இலவச மருத்துவம் ஏதாவது ஒரு மாதத்தில் ஒரு நாளோ வாரத்தில் ஒரு நாளோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ கோயிலிருந்து மருத்துவம் பார்க்கலாம். அதற்கான வசதிகள் உங்களுக்கு செய்து தரப்படும். ஏழை மக்களுக்கு இலவச மருத்துவம் செய்ய விரும்புகிறவர்கள் நாகசக்தி அம்மன் கோவில் நிர்வாகத்தை அணுகலாம்.

மருத்துவ செலவுகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புகிறவர்கள். நேரடியாக எங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம். மருத்துவசெலவுகள் எவ்வளவு ஆனது என்பதற்கான கணக்குகள் இணையதளத்திலேயே வெளியிடப்படும். பயனாளர் விபரங்கள் அதில் தெரிந்து கொள்ளலாம்.

சுயத்தொழில் புரிய விரும்பும் இளைஞர்களுக்காக...

சுயத்தொழில் புரிய விரும்புகிறவர்கள் உதவ விரும்பினால் அவர்கள் தொழில் தொடங்க உங்களால் ஆன உதவிகளை வழங்கலாம். வறுமைகோட்டிற்கு கீழே உள்ளவர்கள் அல்லது உண்மையான திறமைசாலிகள் கண்டிறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் நாகசக்தி அம்மன் கோவில் சுயத்தொழில் புரிய விரும்புகிறவர்கள் உதவுகிறோம். அவர்களுக்கு உதவ விரும்பினால் நன்கொடைகள் அளித்து உதவலாம். பயனாளர்கள் விபரங்களை வெளிப்படையாக வெளியிடப்படும்.